கொவிட் தொற்றால் பெப்ரவரியில் மட்டும் அதிகளவில் பறிபோன உயிர்கள்

கொவிட் தொற்றால் பெப்ரவரியில் மட்டும் அதிகளவில் பறிபோன உயிர்கள்

இலங்கையில் கடந்த பெப்ரவரி மாதத்தில் மட்டும் கொவிட் தொற்றுக்குள்ளான 155 பேர் உயிரிழந்துள்ளதாகவும் இது இலங்கையில் ஒரு மாதத்தில் அதிக கொரோனா நோயாளிகளின் இறப்பை பதிவு செய்த மாதமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெப்ரவரி மாத இறப்புகள் ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும்போது 38வீதம் அதிகரித்துள்ளதாகவும் , ஜனவரியில் 112 இறப்புகளைப் பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கொவிட் 19 காரணமாக இலங்கையில் இதுவரை 471 இறப்புகள் பதிவாகியுள்ளன. எனினும் மொத்த இறப்புகளில் 267 உயிரழப்புகள் கடந்த இரண்டு மாதங்களில் பதிவாகியுள்ளன.

கடந்த ஆண்டு ஒக்டோபரில் கொரோனா இரண்டாவது அலை தாக்கும் வரை இலங்கையில் கொவிட் 19 தொற்றுநோயால் முதல் அலைகளில் 13 உயிரிழப்புகளை மட்டுமே இலங்கை பதிவு செய்தது.

எனினும் இரண்டாவது அலையால் இதுவரை 458 இறப்புகள் பதிவாகியுள்ளன