
சிவாஜிலிங்கத்திடம் பொலிஸார் ஒரு மணிநேர வாக்குமூலம்!
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியில், நீதிமன்ற தடையுத்தரவை மீறி கலந்துகொண்டமைக்காக தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கத்திடம் முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
இன்றைய தினம் வல்வெட்டித்துறையில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து சுமார் ஒருமணிநேரம் எம்.கே.சிவாஜிலிங்கத்திடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இப்போராட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து தமிழ்த் தேசிய கட்சிகளின் பிரதிநிதிகளிடமும் அண்மைய நாட்களில் தொடர் விசாரணைகளையும் வாக்குமூலங்களையும் பொலிஸார் பெற்று வருகின்றனர்.
அத்துடன் போராட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர்கள் சிலரும் அண்மைய நாட்களில் பல்வேறு பொலிஸ் பிரிவினரால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.