வைத்தியசாலையிலிருந்து மற்றொரு கொரோனா நோயாளி தப்பியோட்டம்!

வைத்தியசாலையிலிருந்து மற்றொரு கொரோனா நோயாளி தப்பியோட்டம்!

தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்த கொரோனா தொற்றாளர் ஒருவர், தப்பியோடியுள்ளதாக தம்புள்ள காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு தப்பிச்சென்ற நபர் யாசகர் ஒருவர் என்று அவரை தேடிக் கண்டுபிடிக்க விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

தம்புள்ளை நகரினுள் சஞ்சரித்து யாசகத்தில் ஈடுபடும் யாசகர் தம்பதியினர் நேற்று திடீர் சுகயீனம் காரணமாக தம்புள்ளை வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற வந்துள்ளனர்.

அதற்கமைய, அவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டபோது, அவர்கள் கொரோனா தொற்றுடையோராக அடையாளம் காணப்பட்டனர்.

தம்புள்ளை வைத்தியசலையின் விசேட சிகிச்சை பிரிவின் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவந்த ஆண் ஒருவரே இவ்வாறு தனது மனைவியை வைத்தியசாலையில் விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக வைத்தியசாலை அத்தியட்சகர் காவல்துறையினருக்கு அறிவித்துள்ளார்.

அதற்கமைய, தப்பிச்சென்ற தொற்றாளரைத் தேடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

சப்பான் சந்திரன் என்ற பெயரில் வைத்தியசாலையில் அனுமதியாகிய இந்நபரின் நிரந்தர வதிவிடம் குறித்த தகவல்களை உறுதிப்படுத்த முடியாதுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தம்புள்ளை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.