
தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 5 பேர் கைது
தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறுபவர்களை கைது செய்வதற்கான சுற்றிவளைப்புகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.
முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பேணாமல் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 5 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கமைய கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 3, 261 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் கொழும்பு உள்ளிட்ட மேல் மாகாணத்தில் உள்ள அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் தனிமைப்படுத்தல் விதிகள் தொடர்பான சுற்றிவளைப்புகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாகவும் காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்