படையினரின் பேருந்தை மோதித்தள்ளியது ரயில்

படையினரின் பேருந்தை மோதித்தள்ளியது ரயில்

களனி வனவாசால ரயில் கடவையை கடக்க முற்பட்ட படையினரின் பேருந்தை ரயில் மோதி தள்ளியதில் மூவர் படுகாயமடைந்தனர்.

இந்தசம்பவம் இன்று காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கண்டியிலிருந்து கொழும்பு கோட்டைக்குச் சென்ற ரயிலே இந்த விபத்து சம்பவத்தில் சிக்கியது.இதன்போது ரயில் பேருந்து மீது மோதியதை அடுத்து குறித்த பேருந்து அருகிலுள்ள வீட்டின் மீது மோதியது.இதில் வீட்டில் இருந்த மூவரே படுகாயமடைந்தவர்களாவர்.

இந்த விபத்தில் பேருந்து கடுமையாக சேதமடைந்துள்ளது.ரயில் என்ஜின் சிறியளவில் சேதமடைந்தது.