கொரோனா தொற்றாளர்கள் தொடர்பான விபரங்கள்

கொரோனா தொற்றாளர்கள் தொடர்பான விபரங்கள்

நாட்டில் நேற்று கொவிட்-19 தொற்றுறுதியான 352 பேரில் அதிகமானோர் கொழும்பு மாவட்டத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொவிட்-19 பரவல் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் விடுத்துள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய கொழும்பு மாவட்டத்தில் நேற்று 112 பேருக்கு தொற்றுறுதியாகியுள்ளது.

இதுதவிர, கம்பஹாவில் 57 பேருக்கும் இரத்தினபுரியில் 50 பேருக்கும் நுவரெலியாவில் 25 பேருக்கும் காலியில் 24 பேருக்கும் கண்டியில் 18 பேருக்கம் நேற்று தொற்றுறுதியாகியுள்ளது.

கொழும்பில் நேற்று தொற்றுறுதியானவர்களில் அதிகமானோர் தலங்கம பகுதியிலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அங்கு நேற்று 56 பேருக்கு தொற்றுறுதியாகியுள்ளது.

நுவரெலியாவில் தொற்றுறுதியான 25 பேரில் அதிகமானோர் லிந்துலை பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கிணங்க லிந்துலை பகுதியில் நேற்று 14 பேருக்கு தொற்றுறுதியாகியுள்ளதோடு பொகவந்தலாவையில் 7 பேருக்கும் நுவரெலியாவில் 4 பேருக்கும் தொற்றுறுதியாகியுள்ளது.

மேலும் பதுளையில் நேற்று 8 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானதோடு அவர்களில் 7 பேர் பண்டாரவளை பகுதியை சேர்ந்தவர்கள் என கொவிட்-19 பரவல் தடுப்பு தேசிய செயற்பாட்டு மையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் மினுவாங்கொடை, பேலியகொட மற்றும் சிறைச்சாலை கொத்தணிகளுடன் தொடர்புடைய 79,594 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதோடு அவர்களில் 77,553 பேர் குணமடைந்துள்ளனர்.

நாட்டில் இன்று காலை வரையில் 83 ஆயிரத்து 241 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதோடு அவர்களில் 78, 946 பேர் குணமடைந்துள்ளனர்.

தொற்றுறுதியான 3,824 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன் முப்படையினரின் கீழ் முன்னெடுக்கப்படும் 93 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 9,762 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில் நேற்றைய தினம் 10,421 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன