சாதாரண தரப் பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கு இடையூறு விளைவித்தால் கடும் நடவடிக்கை!

சாதாரண தரப் பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கு இடையூறு விளைவித்தால் கடும் நடவடிக்கை!

கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சையில் தோற்றும் மாணவ மாணவியருக்கு இடையூறு விளைவிப்போருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சாதாரண தரப் பரீட்சைகள் இன்றைய தினம் கடுமையான சுகாதார விதிமுறைகளுக்கு அமைய ஆரம்பமாகியுள்ளது.

இந்த நிலையில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு இடையூறு விளைவிக்கும் எந்தவொரு செயற்பாட்டையும் அனுமதிக்கப் போவதில்லை என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

எதிர்வரும் 11ம் திகதி வரையில் சாதாரணதரப் பரீட்சைகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக பரீட்சை நிலையங்களுக்கு அருகாமையில் ஒலி மாசுறும் வகையில் நடந்து கொள்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

பரீட்சை நிலையங்களுக்கு அருகாமையில் வசிப்பவர்கள் வானொலி, தொலைக்காட்சி போன்றவற்றை மிகுந்த சத்தத்துடன் பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது