24 மணித்தியாலங்களில் வாகன விபத்துக்களால் 12 பேர் பலி!

24 மணித்தியாலங்களில் வாகன விபத்துக்களால் 12 பேர் பலி!

நாட்டில் நேற்றைய தினம் விபத்துகள் காரணமாக 12 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

காவல்துறை பேச்சாளர் பிரதிகாவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன இதனை தெரிவித்துள்ளார்.

அவற்றில் 8 மரணங்கள் நேற்று இடம்பெற்ற விபத்துகளில் பதிவாகியுள்ளன.

ஏனைய நால்வரும் இதற்கு முன்னர் ஏற்பட்ட விபத்துகளில் காயமடைந்து வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தனர்.

இவ்வாறு மரணித்தவர்களில் முச்சக்கரவண்டியில் பயணித்த நால்வரும் பாதசாரிகள் நால்வரும் அடங்குவதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார்