நாட்டில் 460,000க்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன

நாட்டில் 460,000க்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன

நாட்டில் கடந்த ஜனவரி மாதம் 29 ஆம் திகதி முதல் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் நாட்டில் நேற்றைய தினம் 24,374 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

இதற்கமைய இதுவரையில் 466,350 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது