
காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி (படங்கள் இணைப்பு)
புத்தளம் - கல்அடிய -ஹஸ்திபுர பிரதேசத்தில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று (28) காலை 43 வயதான குறித்த நபர் அவரின் வீட்டு அருகில் யானை தாக்கி உயிரிழந்துள்ளதாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
அவர் தனியாக வசித்து வந்துள்ளதுடன், இதற்கு முன்பு மூன்று தடவைகள் காட்டு யானைத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
அதிகாலையில் வீட்டை விட்டு வெளியே வந்த நபரை பதுங்கி இருந்த காட்டு யானை தாக்கியுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.
மேலும், பல சந்தர்ப்பங்களில், அந்த பிரதேசத்தில் 10 பேர் காட்டு யானைகளால் தாக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், இந்த நபர் உட்பட 4 பேர் காட்டு யானை தாக்கி மரணித்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.