பிரேசிலில் கடந்த 24 மணித்தியாலங்களில் 1,337 பேர் பலி

பிரேசிலில் கடந்த 24 மணித்தியாலங்களில் 1,337 பேர் பலி

பிரேசிலில் கொவிட்-19 காரணமாக கடந்த 24 மணித்தியாலங்களில் ஆயிரத்து 337 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

அத்துடன் கொரோனா தொற்றுறுதியான மேலும் 28 ஆயிரத்து 882 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

 

இதற்கமைய பிரேசிலில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 12 ஆயிரத்து 862 ஆக அதிகரித்துள்ளதோடு 33 ஆயிரத்து 884 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

அமெரிக்காவை தொடர்ந்து கொரோனா தொற்றுறுதியான அதிகமானோர் பிரேசிலிலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

 

இதேவேளை, கொரோனா வைரஸ் காரணமாக சர்வதேச ரீதியில் 66 இலட்சத்து 88 ஆயிரத்து 922 பேருக்க இதுவரையில் கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

 

அதேநேரம், இந்த வைரஸ் காரணமாக 3 இலட்சத்து 92 ஆயிரத்து 123 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

எவ்வாறாயினும், உலகளாவிய ரீதியில் கொவிட் 19 தொற்றில் இருந்து 32 இலட்சத்து 28 ஆயிரத்து 651 பேர் குணமடைந்துள்ளனர்.