கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை நாளை ஆரம்பம்-(காணொளி)

கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை நாளை ஆரம்பம்-(காணொளி)

கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ளும் சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றி நாளைய தினம் கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைகள் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள 4513 பரீட்சை மையங்களில் பரீட்சைகள் இடம்பெறுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், 6,22,352 பேர் இம்முறை சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதேபோல், ஒவ்வொரு மாவட்டத்திலும் மேலதிகமாக இரண்டு பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டிருக்கும் எனவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.