
திருடப்படும் உந்துருளிகளை கொள்வனவு செய்து பாகம் பிரித்து விற்பனை செய்யும் நிலையம் கண்டறியப்பட்டுள்ளது
திருடப்படும் உந்துருளிகளை கொள்வனவு செய்து பாகம் பிரித்து விற்பனை செய்யும் நிலையம் ஒன்று கல்நேவ - நேகம பகுதியில் கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த இடத்தில் இருந்து உந்துருளிகள் பதிவு செய்யப்பட்டிருந்த 23 இலக்க தகடுகள், இயந்திரங்கள் உள்ளிட்ட உதிரி பாகங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்