முல்லைத்தீவு வட்டுவாகல் மீனவர்கள் விடுத்துள்ள கோரிக்கை! உறுதிமொழியளித்த கடல்தொழில் அமைச்சர்

முல்லைத்தீவு வட்டுவாகல் மீனவர்கள் விடுத்துள்ள கோரிக்கை! உறுதிமொழியளித்த கடல்தொழில் அமைச்சர்

முல்லைத்தீவு மாவட்டத்தில் வட்டுவாகல் களப்பில் மீன்பிடி தொழிலில் ஈடுபடும் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வட்டுவாகல் களப்பை ஆழப்படுத்தி தருமாறு மீனவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இது தொடர்பில் மீனவர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில்,

நான் சிறிய வயதில் இருந்தபோது இதோ ஆழமாக்கி தருகிறோம் என்று கூற தொடங்கியவர்கள் இன்று எனது மகனுக்கு ஒன்பது வயதாகிவிட்டது இன்றுவரை ஆழமாக்கி தருகிறோம் என்று கூருக்கிறார்களே தவிர ஆழமாக்கி தரப்படவில்லை என அவர் கவலை வெளியிட்டார்.

இப்போது இறால் சீசன் ஆரம்பித்துள்ள நிலையில் வட்டுவாகல் பகுதியில் அதிகளவான மீனவர்கள் தமது வீச்சு வலை தொழிலை செய்ய ஆரம்பித்துள்ளனர். ஆனாலும் இந்த களப்பு ஆளப்படுத்தாத காரணத்தினால் இறால் பிடிபடும் அளவில் பாரிய வீழ்ச்சி காணப்படுவதாகவும் எனவே சம்மந்தப்பட்ட தரப்புக்கள் எமது வாழ்வாதாரத்தில் அக்கறை கொண்டு விரைவில் இதற்கான தீர்வினை வழங்க வேண்டும் என கோரிநிக்கின்றனர்

இந்நிலையில் மூன்று நாள் விஜயமாக முல்லைத்தீவு வந்து மீனவர்களை சந்தித்த கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வட்டுவாகல் ஆழமாக்கல் பணி விரைவில் இடம்பெறும் எனவும் குறித்த வட்டுவாகல் களப்பில் இறால் குஞ்சுகள், மீன் குஞ்சுகள் விடுவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு விரைவில் மீனவ மக்களது வாழ்வாதாரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.