கடந்த 24 மணித்தியாலங்களில் 2,429 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்

கடந்த 24 மணித்தியாலங்களில் 2,429 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்

கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டுக்குள் வந்த 38 விமானங்கள் மூலம் 2,429 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களுள் 133 பேர் ஐக்கிய அராபு இராச்சியத்தில் இருந்து நாடு திரும்பியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல், டுபாயில் இருந்து 81 பேர் நாட்டுக்குள் வந்ததாகவும் கூறப்படுகின்றது.

கடந்த 24 மணித்தியாலங்களில் 574 பேர் நாட்டில் இருந்து வெளியேறி வெளிநாடுளுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது