போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்த இடங்களை கண்டறிந்த காவல்துறை

போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்த இடங்களை கண்டறிந்த காவல்துறை

வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுள்ள போதைப்பொருள் வர்த்தகரான ஹரக் கட்டா என்ற ருவன் நந்துன் சிந்தகவால் வழிநடத்தப்படும் சிலரால் போதைப்பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெலிகம - இமதுவ - தொஸ்தரவத்தை பகுதியில் விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் அதிகாரிகளால் நேற்றைய தினம் இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்ததாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கடந்த 25 ஆம் திகதி 25 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதான இருவரிடம் மேற்கொள்ளப்பட்டிருந்த விசாரணைகளுக்கு அமைய இந்த சோதனை நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி தொஸ்தரவத்தை பகுதியில் முன்னெடுக்கப்பட்டிருந்த சோதனை நடவடிக்கையின் போது புதைத்து வைக்கப்பட்டிருந்த சில பீப்பாய்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் அவற்றில் போதைப்பொருட்கள் மறைத்து வைக்கபப்பட்டுள்ளமை குறித்த தகவல் கிடைத்துள்ளதாகவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்