
யாழ்.போதனா வைத்தியசாலை ஸ்தம்பிதமடைந்த சேவைகள் தொடர்பில் பதில் பணிப்பாளா விடுத்துள்ள அறிவிப்பு!
யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் நோயாளர்களைப் பார்வையிட இன்றிலிருந்து ஒருவருக்கு மட்டுமே அனுமதியளிக்கப்படும் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் தெரிவித்ததுள்ளார் .
இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை வடக்கு மாகாணத்தில் உள்ள நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதில் பெரும் பங்காற்றியவரும் நிலையில் கடந்த வாரம் ஏற்பட்ட சில சூழ்நிலை காரணமாக எமது வைத்திய சேவைகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.
எனினும் யாழ் போதனா வைத்தியசாலையின் வழமையான செயற்பாடுகள் எதிர்வரும் 5 ஆம் தேதி முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் வைத்தியர் சிறீ பவானந்தனாஜா தெரிவித்தார்.
யாழ்போதனா வைத்தியசாலையில் அண்மையில் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் மூவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதன் காரணமாக வைத்தியசாலையில் சில பிரிவுகள் மூடப்பட்டதோடு, தனிமைப்படுத்தல் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டன.
எனினும் தற்போது அந்த நிலைமை சீராக்கப்பட்டு எதிர்வரும் 5 ஆம் திகதியிலிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் வழமையான செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதோடு, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளர்களைப் பார்வையிட ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் எனவும் தெரிவித்தார்.