
நல்லிணக்கத்திற்கான எடுத்துக்காட்டு யாழ். பல்கலையில் 4000 சிங்கள மாணவர்கள் – கப்ரால்
யாழ். பல்கலைக்கழகத்தில் 4000 க்கும் மேற்பட்டவர்கள் சிங்கள மாணவர்கள் கல்வி பயில்வதே நல்லிணக்கத்திற்கான எடுத்துக்காட்டு என நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 46 வது கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் நிலையில் இந்த விடயம் தொடர்பாக வெளியிட்டுள்ள டுவிட்டரில் பதிவிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் 12 ஆயிரம் மாணவர்கள் கல்வி பயில்வதாகவும் அவர்களில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சிங்கள மாணவர்கள் என்றும் சுட்டிக்காட்டிய அவர் இது நல்லிணக்கத்திற்கான ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என ஜித் நிவாட் கப்ரால் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் மனித உரிமைகள், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலுக்கான உறுதிப்பாட்டை மேற்குலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது