அமெரிக்க தேசிய அணியில் இடம்பிடிக்கவுள்ள பிரபல இலங்கை வீரர்கள்?

அமெரிக்க தேசிய அணியில் இடம்பிடிக்கவுள்ள பிரபல இலங்கை வீரர்கள்?

இலங்கை கிரிக்கெட் அணியின் பிரபல வீரர்கள் சிலர் அமெரிக்காவின் தேசிய கிரிக்கெட் அணியில் இடம்பிடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி - வளர்ந்து வரும் வீரர்களான துஸ்மந்த சமீர, அமில அபொன்சூ, தில்ஷான் முணவீர, மலிந்த புஸ்பகுமார, லஹிரு மதுஷங்க ஆகியோரே இவ்வாறு அமெரிக்க அணியில் இணைய உள்ளார்கள் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே அணியில் இருந்த செஹான் ஜயசூரிய அண்மையில் அமெரிக்கா சென்றார்.

இதேவேளை இலங்கை அணியில் இருந்து கடந்த வாரம் உப்புல் தரங்க விலகியிருந்த நிலையில், அவரும் அமெரிக்க தேசிய அணியில் இணையவுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.