
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சந்திப்பு
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா பி ரெப்லிற்ஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள தனியர் விருந்தினர் விடுதி ஒன்றில் இன்று முற்பகல் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, வட மாகாண சபை முன்னாள் அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் ஆகியோர் இந்தச் சந்திப்பில் பங்கேற்றுள்ளனர்.
இந்த சந்திப்பு தொடர்பில், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் ஆகியோர் இவ்வாறு கருத்து தெரிவித்தனர்