நாட்டில் மேலும் 3 கொவிட்-19 மரணங்கள் பதிவாகின
நாட்டில் மேலும் 3 கொவிட்19 மரணங்கள் பதிவாகியமையை அடுத்து கொவிட்19 என உறுதிப்படுத்தப்பட்ட மரணங்களின் மொத்த எண்ணிக்கை 453 ஆக உயர்வடைந்துள்ளன.
இதற்கமைய வத்தளை பகுதியை சேர்ந்த 75 வயதுடைய ஆண் ஒருவருக்கு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கொவிட் 19 தொற்றுதி செய்யப்பட்டிருந்தது.
இதனையடுத்து அவர் அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
கொவிட்19 நிமோனியா நிலைமை காரணமாக அவர் மரணித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை நுவரெலியா பகுதியை சேர்ந்த 76 வயதான ஆண் ஒருவர் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 20 ஆம் திகதி உயிரிழந்தார்.
கொவிட் 19 தொற்று காரணமாக அவர் மரணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வலப்பனை பகுதியை சேர்ந்த 83 வயதுடைய ஆண் ஒருவர் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றிருந்த அவர் கடந்த 21 ஆம் திகதி தமது வீட்டில் உயிரிழந்தார்.
கொவிட் 19 நிமோனியா, குருதி விசமானமை காரணமாக அவர் மரணித்ததாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.