கொரோனாவிலிருந்து மீண்ட சுகாதார அமைச்சர்! தற்போதைய நிலை

கொரோனாவிலிருந்து மீண்ட சுகாதார அமைச்சர்! தற்போதைய நிலை

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி இன்று தனது சேவையின் நிமித்தம் அமைச்சிற்கு சமுகமளித்துள்ளார்.

இதன்போது சுகாதார அமைச்சர் மற்றும் அமைச்சின் அதிகாரிகளுக்கிடையில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடினார்.

இதேவேளை தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைள் மற்றும் பி.சி.ஆர். பரிசோதனைகள் தொடர்பாகவும் அவர் கவனம் செலுத்தியதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.