கொவிட்-19 தடுப்பூசிகளை வறிய நாடுகளுக்கு கிடைக்கப்பெறாமல் செல்வந்த நாடுகள் தடுக்கின்றன - உலக சுகாதார ஸ்தாபனம் குற்றச்சாட்டு

கொவிட்-19 தடுப்பூசிகளை வறிய நாடுகளுக்கு கிடைக்கப்பெறாமல் செல்வந்த நாடுகள் தடுக்கின்றன - உலக சுகாதார ஸ்தாபனம் குற்றச்சாட்டு

செல்வந்த நாடுகள், கொவிட்-19 தடுப்பூசிகளை வறிய நாடுகளுக்கு கிடைக்கப்பெறாமல் தடுப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

அதன் பணிப்பாளர் டெட்ரோஸ் அதனோம் இதனைத் தெரிவித்துள்ளார்.

செல்வந்த நாடுகள் தற்போது தங்களுக்கான கொவிட்-19 தடுப்பூசிகளை வாங்கிக் குவித்துக் கொண்டுள்ளன.

இதனால் வறிய நாடுகளுக்கு தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கொவிட் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள் முன்பு வறிய நாடுகளுக்கான ஒதுக்கத்துக்கு இணங்கி இருந்தன.

ஆனால் அந்த ஒதுக்கத் தொகை தற்போது குறைக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

கொவெக்ஸ் திட்டத்தின் மூலம் வருமானம் குறைந்த நாடுகளுக்கு கொவிட் தடுப்பூசிகளை விநியோகிக்க உலக சுகாதார ஸ்தாபனம் தீர்மானித்திருந்தது.

இதற்காக வழங்கப்படுகின்ற தடுப்பூசிகளின் எண்ணிக்கை குறைவடைந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்