சர்வதேச கிரிக்கெட்டுக்கு விடைகொடுத்தார் தரங்க!

சர்வதேச கிரிக்கெட்டுக்கு விடைகொடுத்தார் தரங்க!

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகுவதாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் உபுல் தரங்க அறிவித்துள்ளார்.

15 ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்குபற்றி வந்த அவர் தற்போது ஓய்வுபெற தீர்மானித்திருப்பதாக அவரது ஊடக அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் ஒருநாள் அணிக்கான தலைவராக இருந்த உபுல் தரங்க ஆரம்ப துடுப்பாட்ட வீரராகவும் செயல்பட்டு வந்திருந்தார்.

அவர் 31 டெஸ்ட், 235 சர்வதேச ஒரு நாள் மற்றும் 26 இருபதுக்கு 20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

Image