
கொரோனா தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளும் 3 யோசனைகளுக்கு அமைச்சரவை அனுமதி
இந்தியாவின் சீரம் நிறுவகத்திடம் இருந்து 10 மில்லியன் கொவிஸீல்ட் தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கான கொடுப்பனவை செலுத்துவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
பதில் சுகாதார அமைச்சர் வைத்தியர் சன்ன ஜயசுமன இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தடுப்பூசிகளை பிரித்தானியாவின் தாய் நிறுவனத்திடமிருந்து கொள்வனவு செய்வதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அதேநேரம், உலக சுகாதார ஸ்தாபனத்தின் தடுப்பூசி வழங்கல் வேலைத்திட்டத்தின்கீழ், இலங்கைக்கு தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்வதற்கான உடன்படிக்கைக்கும் அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.
கோவெக்ஸ் தடுப்பூசி செலுத்தல் திட்டத்தின்கீழ், உலக சுகாதார ஸ்தாபனத்தினால், வறிய நாடுகளுக்கு தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது