தமிழில் கையெழுத்திடுவோம் - புதிய செயற்றிட்டம் அங்குரார்பணம்
உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு அன்று தமிழி அமைப்பால் ஒழுங்குசெய்யப்பட்ட தமிழி அமைப்பிற்கும் தமிழ் ஆர்வலர்களுக்குமிடையான கலந்துரையாடல் நேற்று ஞாயிற்றுக்கிழமை பொற்பதி அறிவாலயத்தில் நடைபெற்றது.
நிகழ்வின் பிரதம அதிதியாக வாழ்நாள் பேராசிரியர் அருணாச்சலம் சண்முகதாஸ் மற்றும் மனோன்மணி சண்முகதாஸ் ஆகியோர் கலந்துகொண்டார்கள்.
அத்துடன் கௌரவ அதிதியாக யாழ். மாநகரசபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் கலந்துகொண்டார்.
தமிழி அமைப்பிற்கும் தமிழ் ஆர்வலர்களுக்குமிடையான கலந்துரையாடலைத் தொடர்ந்து தமிழின் இருப்பை உறுதிசெய்யும் நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்துவரும் யாழ் மாநகர முதல்வர் தமிழி அமைப்பால் கௌரவிக்கப்பட்டார்.
இந் நிகழ்வில் “தமிழில் கையெழுத்திடுவோம்” என்ற தமிழி அமைப்பின் செயற்திட்டம் மனோன்மணி சண்முகதாஸால் அங்குரார்பணம் செய்து வைக்கப்பட்டது