தீயில் கருகிய போதிலும் மூதாட்டியின் உடலில் உயிர்ப்புடன் இருந்த கொரோனா - வெளிவரும் அதிர்ச்சி தகவல்

தீயில் கருகிய போதிலும் மூதாட்டியின் உடலில் உயிர்ப்புடன் இருந்த கொரோனா - வெளிவரும் அதிர்ச்சி தகவல்

தீவிபத்தில் கருகி பலியான மூதாட்டியின் உடம்பிலிருந்த கொரோனா கிருமி அழிவடையாமல் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் இலங்கையில் பதிவாகியுள்ளது.இது தொடர்பில் தெரியவருவதாவது,

காலி, ஹப்புகல – பொரலியதொலவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 71 வயது மூதாட்டி, நீண்டகாலமாக விசேட தேவையுடையவராக இருந்துள்ளார்.

தனது வீட்டின் அறையில் புகை எழும்புவதை அவதானித்த குறித்த மூதாட்டி, சக்கரநாற்காலியின் உதவியில் அதனை பார்க்கச் சென்றபோது தீயில் கருகியுள்ளார்.

அதன் பின் உடனடியாக கராபிட்டிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதிலும் அவர் உயிரிழந்த நிலையில் பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டது.

பரிசோதனையின் முடிவு இன்று வெளியாகி அதிர்ச்சியளித்திருக்கிறது.

குறித்த பெண் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பது பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.