ஆமையின் உயிரை காப்பாற்றிய 4 மணிநேர சத்திரசிகிச்சை (காணொளி)

ஆமையின் உயிரை காப்பாற்றிய 4 மணிநேர சத்திரசிகிச்சை (காணொளி)

தலைப்பகுதியில் கடுமையாக காயம் ஏற்பட்டிருந்த பாரிய ஆமை ஒன்றின் உயிரைக் காப்பாற்றுவதற்காக கந்தக்குளி வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள் மேற்கொண்ட சிக்கலான அறுவை சிகிச்சை வெற்றியளித்துள்ளது.


அறுவை சிகிச்சையின் பின்னர் குணமடைந்த ஆமை மீண்டும் நேற்று கடலில் விடுவிக்கப்பட்டது.

சுமார் 40 கிலோ நிறையுடைய இந்த பாரிய ஆமை, அண்மையில் கற்பிட்டி, கந்தக்குளி கடற்கரையிலிருந்து கடற்கரையிலிருந்து கடற்படையினரால் மீட்கப்பட்டிருந்தது.

அதன்போது, தலைமையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிர்க்கு போராடிக் கொண்டிருந்த இந்த ஆமையை உடனடியாக கந்தக்குளி வனஜீவராசிகள் அலுவலத்திடம் கடற்படையினர் ஒப்படைத்தனர்.

அதன்போது, ஆமையில் உடல்நிலை தொடர்பில் ஆராய்ந்த கால்நடை வைத்தியர் இசுறு கோட்டேகொட, ஆமையின் தலையில் சத்திரசிகிச்சை மேற்கொள்ள தீர்மானித்தார்.

சுமார் 4 மணித்தியாலம் மேற்கொண்ட சிக்கலான சத்திரசிகிச்சையின் பின்னர் ஆமையின் தலையை பழைய நிலைக்கு கொண்டுவரப்பட்டது.

பின்னர் பூரண குணமடைந்த ஆமை நேற்று கடலுக்கு விடுவிக்கப்பட்டது.