தொடருந்து இயந்திர சாரதிகள் இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு

தொடருந்து இயந்திர சாரதிகள் இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு

தொடருந்து இயந்திர சாரதிகள், இன்று நள்ளிரவு முதல் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

தொடருந்து இயந்திர சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக்க தொடங்கொட எமது செய்திச் சேவைக்கு இதனைத் தெரிவித்தார்.

மஹவ மற்றும் ஓமந்தைக்கு இடையிலான தொடருந்து வழித்தடத்தை, இரட்டை வழித்தடங்களாக சீரமைக்கும் திட்டத்தில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் முறைகேடுகளுக்கு கண்டனம் தெரிவித்து இந்த அடையாள பணிப்புறக்கணிப்பை அவர்கள் மேற்கொள்ள உள்ளனர்.

தொடருந்து கட்டுப்பாட்டு சேவை உள்ளிட்ட 19 தொழிற்சங்கங்கள் இந்த பணிப்புறக்கணிப்பு ஆதரவளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்