
நானுஓயாவில் பேருந்து - பாரவூர்தி விபத்து: 13 பேர் காயம்
பிபிலையில் இருந்து தலவாக்கலை நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று, நானுஓயா ரதால குறுக்கு வீதிப் பகுதியில், பாரவூர்தி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 13 பேர் காயமடைந்துள்ளனர்.
குறித்த வீதியில் பயணித்த பேருந்து, வேகக்கட்டுப்பாட்டை இழந்து முன்னோக்கி பயணித்துக்கொண்டிருந்த பாரவூர்தியுடன் மோதி விபத்துக்குள்ளானதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த சந்தர்ப்பத்தில் அந்தப் பேருந்தில் 18 பேர் பயணித்துள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்த 13 பேர் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.