
இந்தியா வசமுள்ள திருமலை எரிபொருள் தாங்கிகள் -புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு எதிராக போர்க்கொடி
திருகோணமலை எரிபொருள் தாங்கிகள் தொடர்பிலான எந்தவொரு புரிந்துணர்வு உடன்படிக்கைகளும் கையெழுத்திடக் கூடாது என பெற்றோலிய தொழிற்சங்கங்கள் போர்க்கொடி தூக்கியுள்ளன.
இரண்டாம் உலக மகா யுத்தத்துக்கு பிறகு முழுமையாக பயன்பெறாது போன திருகோணமலை எரிபொருள் தாங்கி 2003ஆம் ஆண்டு இந்திய நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.
இந்த நிலையில் இலங்கையிலுள்ள அனைத்து எரிபொருள் தாங்கிகளும் 2033ம் ஆண்டு இலங்கை வசமாகும் என அந்த தொழிற்சங்கத்தின் தலைவர் அசோக ரங்வல தெரிவித்துள்ளார்.
IOC நிறுவனம் வசமுள்ள அனைத்து எரிபொருள் தாங்கிகளும் விரைவில் இலங்கை வசமாகவுள்ளதாக அமைச்சர் உதய கம்மன்பில அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.