கொரோனா தொற்றிலிருந்து இன்றும் பலர் குணமடைந்தனர்

கொரோனா தொற்றிலிருந்து இன்றும் பலர் குணமடைந்தனர்

நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து மேலும் 843 பேர் குணமடைந்துள்ளனர்.

தொற்றுநோய் தடுப்பு பிரிவு விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 74,299 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் தொற்றுறுதியான 4,746 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாட்டில் இதுவரையில் 79,480 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.