சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட நபரொருவர் கைது

சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட நபரொருவர் கைது

13 மற்றும் 14 வயது சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஒருவரை இமதுவ காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கடந்த பெப்ரவரி 19ஆம் திகதியன்று 29 வயதான திருமணமாகாத நபர் ஒருவரே கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட நபர் இவ்விரு பிள்ளைகளின் தாயுடன் கள்ளத் தொடர்பில் இருந்துள்ளதாக காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

தனது கணவனின் இழப்பின் பின் ஏற்பட்ட வறுமை நிலை காரணமாக மேற்படி சிறுவர்கள் இருவரும் இரண்டு வருட காலமாக பாடசாலைக்குச் செல்லவில்லையென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீண்ட நாட்களாக தொடரும் பிரச்சினைகளுக்காக பரிகாரம் ஒன்றை செய்வதற்காக மேற்படி சந்தேக நபருடன் குறித்த தாய் தனது பிள்ளைகளுடன் வெலிகம பிரதேசத்திற்கு சென்றுள்ளார்.

அவ்வேளையில் அங்கிருந்த பெண், குறித்த தாயிடம் அவரது பிள்ளைகள் துன்புறுத்தப்படுகிறார்களா என கேட்டுள்ளதோடு அதற்க அத்தாய் அவ்வாறு நிகழ்வதாக கூறியுள்ளார்.

அதன்பின் அப்பெண்ணால் காவல் துறையில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.