வவுனியாவில் இன்று இரவு இடம்பெற்ற விபத்து - ஸ்தலத்திற்கு உடன் விரைந்த பொலிஸார்

வவுனியாவில் இன்று இரவு இடம்பெற்ற விபத்து - ஸ்தலத்திற்கு உடன் விரைந்த பொலிஸார்

வவுனியாவில் இன்று இரவு இடம்பெற்ற பயங்கர விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா இலுப்பையடி சந்தி மரக்கறி சந்திக்கு அருகாமையில் இன்றிரவு 7 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றது.

ஹொரவப்பொத்தானை வீதியூடாக கோழி இறைச்சி ஏற்றிச் சென்ற பட்டா ரக வாகனம் வீதியில் முன்பாக சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை மோதித்தள்ளியதுடன் பட்டா ரக வாகனத்தின் சில் பகுதியில் மோட்டார் சைக்கிள் சிக்குண்டது.

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளின் சாரதி படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.