
கெரவலைப்பிட்டிய குப்பை மேட்டு தீ அனைப்பில் இராணுவம் வா. சுதர்ஸ்சன்
கெரவலைப்பிட்டிய குப்பை மேட்டில் 18 ம் திகதி மாலை 5.30 மணிக்கு ஏற்பட்ட தீயினை கட்டுப்படுத்துவதற்காக இராணுவத்தின் 15 வது பீரங்கிப் படையின் ட்ரோன் படையுடன் இராணுவம் கடற்படை மற்றும் வான்படையின் அவசர உதவி படையினர் விரைந்து சென்று நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
அவசர நிலலைமையின் தேவையினை கருத்திற் கொண்டு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அவசர உதவிக்காக ஆயுதப்படையினை கோரியதற்கு அமைவாக பாதுகாப்புப் பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா சகோதரி சேவைகளின் ஒத்துழைப்புடன் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் வசந்த ஆப்ரூ அவர்களுக்கு வழங்கிய அறிவுறுத்தல்களுக்கு அமைவாக உடனடியாக கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்கப்பட்டன. அதன்படி, இராணுவத்தின் ட்ரோன் அணிகளும், விமானப் படையின் பம்பி வாளி பொருத்தப்பட்ட பெல் 412 உலங்கு வானூர்தியும், இராணுவம் மற்றும் கடற் படை படையினரும் குறித்த நடவடிக்கைகளுக்கு ஈடுப்படுத்தப்பட்டனர்.
6 வது கெமுனு ஹேவா படை , 8 வது இலங்கை இலேசாயுத காலாட் படை மற்றும் 1வது இலங்கை கவசப் வாகனப் படை ஆகியவற்றின் படையினர் தங்கள் கட்டளை அதிகாரிகளின் வழிகாட்டுதலின் பேரில் கடற்படை மற்றும் விமானப்படையின் அவசரக் உதவிக் குழுக்களுடன் நேற்று மாலை (18) முதல். செயற்பட்டு வெள்ளிக்கிழமை (19) தீயினைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இன்று (19) காலை 8.00 மணியளவில் படையினர் தீ பரவுவதை முற்றிலுமாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். காலை 10.00 மணியளவில் 14 வது படைப்பிரிவின் தளபதியின் மேற்பார்வையின் கீழ் 141 பிரிகேட் படையினர் தங்களது கனரக இயந்திரங்கள் மற்றும் புல்டோசர்களுடன் அங்கு மீண்டும் தீ பரவல் ஏற்படாத வகையில் குப்பைக் குவியல்களைத் சீர் செயதனர். சொத்துக்களுக்கோ அல்லது பொதுமக்களுக்கோ எதுவித சேதமும் ஏற்படவில்லை.