கஜேந்திரகுமார் எம்.பியிடமும் காவல்துறையினர் வாக்குமூலம்!

கஜேந்திரகுமார் எம்.பியிடமும் காவல்துறையினர் வாக்குமூலம்!

அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் கிளிநொச்சி காவற்துறையினர் இன்று வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

நீதிமன்ற தடையை மீறி பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் பங்கேற்றதாக கூறி இந்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், இராசமாணிக்கம் சாணக்கியன், தவராசா கலையரசன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் ஆகியோரிடம் காவற்துறையினர் வாக்குமூலங்களை பதிவு செய்திருந்தனர்.

வடக்கு, கிழக்கில் உள்ள எட்டு காவல் நிலையங்களில் இருந்து பிரவேசித்த காவற்துறை உத்தியோகத்தர்களினால் தம்மிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.

இதேவேளை, தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனிடம் மாங்குளம் மற்றும் வவுனியா காவற்துறையினர் நேற்றைய தினம் வாக்குமூலங்களை பதிவு செய்து கொண்டனர்.

இன்று முற்பகல் மாங்குளம் காவ்துறை நிலை அதிகாரிகளும், பிற்பகல் வவுனியா காவற்துறை நிலைய அதிகாரிகளும் வாக்குமூலங்களை பதிவு செய்து கொண்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கநாதன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணியில் கலந்துகொண்டமை தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன் உறுப்பினர் தவராசா கலையரசனிடம் நேற்று காவல்துறையினர் வாக்குமூலம் பதிவு செய்தனர்.