பிரதமரின் பணிப்புரைக்கமைய மதத்தலைவர்களுக்கு கொவிட் 19 தடுப்பூசி

பிரதமரின் பணிப்புரைக்கமைய மதத்தலைவர்களுக்கு கொவிட் 19 தடுப்பூசி

பிரதமர் மகிந்த ராஜபக்ஸவின் பணிப்புரைக்கமைவாக மதத்தலைவர்களுக்கு கொவிட் 19 தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் கண்டியில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதத்தலைவர்களுக்கும் கொவிட் 19 தடுப்பூசி செலுத்த வேண்டும் என பிரதமர் ஆலோசனை வழங்கியிருந்தார்.

இந்த வேலைத்திட்டத்திற்கு அமைய பதுளை மாவட்டத்தில் உள்ள மதத்தலைவர்களுக்கு நாளைய தினம் கொவிட் 19 தடுப்பூசிகள் ஏற்றப்படவுள்ளன