சுகாதார பராமரிப்பு முறைக்கு உட்பட்டு பல்கலைகழகங்கள் விரைவில் திறக்கப்பட வேண்டுமென கோரிக்கை

சுகாதார பராமரிப்பு முறைக்கு உட்பட்டு பல்கலைகழகங்கள் விரைவில் திறக்கப்பட வேண்டுமென கோரிக்கை

ஒரு முறையான சுகாதார பராமரிப்பு முறைக்கு உட்பட்டு நாடு முழுவதும் உள்ள பல்கலைகழகங்கள் விரைவில் திறக்கப்பட வேண்டுமென அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.

அதன் அமைப்பாளர் இணைப்பாளர் ரத்கரவே ஜீனரதன தேரர் இதனை எமது செய்தி பிரிவுக்கு குறிப்பிட்டார்.

சுகாதார பாதுகாப்பு முறைமைகள் குறித்த முன்மொழிவுகள் பல்கலைகழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள போதிலும் அது செயற்படுத்தப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, அண்மையில் 8 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட பேராதனை பல்கலைகழகத்தில் மேலும் 3000 மாணவர்களை கொண்ட குழுவின் கற்றல் செயற்பாடுகளுக்காக பல்கலைகழகத்தை அடுத்த வாரம் திறப்பதற்கு அதன் நிர்வாகம் தீர்மானித்துள்ளது.

பேராதனை பல்கலைகழகத்தின் உபவேந்தர் இதனை எமது செய்தி பிரிவுக்கு தெரிவித்தார்.

முறையான சுகாதார பாதுகாப்பு முறைமைகளுக்கு அமைய பல்கலைகழகம், கற்றல் மற்றும் பரீட்சை நடவடிக்கைகளுக்காக திறக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.