இலங்கையிலும் நில அதிர்வு ஆபத்தா?

இலங்கையிலும் நில அதிர்வு ஆபத்தா?

இலங்கையிலும் இலங்கைக்கு அருகிலும் எதிர்காலத்தில் சிறிய அளவிலான நில அதிர்வுகள் பதிவாகக்கூடும் என்று பேராதனை பல்கலைக்கழகத்தின் புவிச்சரிதவியல் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று இலங்கைக்கு அருகில் கடல் ஆழத்தில் 4 மெக்னிரியுட் அளவான நில அதிர்வு பதிவாகி இருந்தது.

இந்தோ-அவுஸ்திரேலிய புவித்தகட்டில் ஏற்பட்ட பிளவே இதற்கான காரணம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் எதிர்காலத்திலும் அவ்வாறான சிறிய நில அதிர்வுகள் ஏற்படக்கூடும்.

எனினும் அவை நாட்டுக்கு ஆபத்தை ஏற்படுத்துவனவாக அமையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது