வீதியில் பயணித்துக்கொண்டிருந்தவருக்கு திடீரென ஏற்பட்ட விபரீதம்- யாழில் பரபரப்பு சம்பவம்!

வீதியில் பயணித்துக்கொண்டிருந்தவருக்கு திடீரென ஏற்பட்ட விபரீதம்- யாழில் பரபரப்பு சம்பவம்!

யாழ்.நல்லூர் கோவில் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த நபர் திடீரென உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பரபரப்படைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்புத்துறையில் இருந்து திருநெல்வேலி சந்தைக்கு மரக்கறி வாங்க சென்ற 75 வயதுடைய முதியவர் ஒருவரே சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த வேளை மயக்கமடைந்து, நிலத்தில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இடம்பெற்ற பகுதியில் யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள். உயிரிழந்தவர் மாரடைப்பினால் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

இவர் யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதியில் மரக்கறி கடை நடத்துபவர் எனவும் இன்று காலை வீட்டில் இருந்து மரக்கறி வாங்குவதற்காக திருநெல்வேலி பொதுச் சந்தைக்கு சைக்கிளில் சென்றதாகவும் அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

குறித்த விடயம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளனர்.