இது உங்கள் டிவி ஷோ அல்ல, உங்கள் வேலையை மட்டும் பாருங்கள்: லட்சுமி ராமகிருஷ்ணனுடன் வனிதா மோதல்
பிக்பாஸ் வனிதா, பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டது குறித்த சர்ச்சை கடந்த இரண்டு நாட்களாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகிறது. இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து நடிகையும் இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது ’இப்பொழுது தான் அந்த செய்தியை பார்த்தேன். அவர் ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளவர். இன்னும் விவாகரத்து செய்யவில்லை. அப்படியிருக்கும்போது படிப்பு, புகழ் மற்றும் தைரியமுள்ள ஒரு பெண் எப்படி இந்த தவறை செய்திருப்பார் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். மேலும் இந்த திருமணம் முடியும் வரை முதல் மனைவி ஏன் அமைதியாக இருந்தார். திருமணத்தை ஏன் தடுத்து நிறுத்தவில்லை என்ற கேள்வியும் எழுந்துள்ளது என்று கூறினார்
மேலும் வனிதா பல கடினமான சூழல்களை எதிர்கொண்டுள்ளார். அவற்றை வெளிப்படையாகப் பேசியுள்ளார். இந்த உறவாவது அவருக்கு நல்லவிதமாக அமையும் என நினைத்தேன். அவர் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்றே அனைவரும் விரும்புகின்றனர். ஆனால், இந்தப் பிரச்னையை அவர் கவனிக்கவில்லை என்பது வருத்தமானது.
லட்சுமி ராமகிருஷ்ணனின் இந்த பதிவுக்கு பதில் கூறிய வனிதா, ‘தம்பதிகளாக இருக்கும் இரண்டு பேர் ஏன் பிரிந்து சென்றார்கள் அல்லது விவாகரத்து செய்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா? நீங்கள் உங்களுக்கு தெரியாத ஒன்றில் எந்த வகையிலும் அக்கறை கொள்வது உங்களுடைய வேலை இல்லை. நான் அவர்களுடைய தனிப்பட்ட விஷயத்தில் தலையிடவில்லை. எனவே இந்த விஷயத்தில் உங்களுடைய தலையீட்டை நிறுத்திக் கொள்ளுங்கள். உங்களுக்கு தெரியாத ஒருவரை பற்றி எந்தவித கருத்துக்களையும் நீங்கள் சொல்ல வேண்டாம்
மேலும் இது உங்களுடைய தொலைக்காட்சி ஷோ அல்ல. நான் தெரிந்தோ தெரியாமலோ இந்த விஷயத்தில் ஈடுபட்டுள்ளேன். அதை எப்படி சரிப்படுத்துவது என்பது எனக்கு தெரியும். உங்களுடைய ஆலோசனை அல்லது உதவி எங்களுக்கு தேவை இல்லை’ என்று குறிப்பிட்டு உள்ளார்
இதற்கு பதிலளித்த லட்சுமி ராமகிருஷ்ணன், ‘வனிதா விஷயத்தை விவாதம் செய்வதை இத்துடன் நிறுத்தி கொள்கிறேன். இந்த திருமணம் குறித்து நான் என்னுடைய கருத்தை தெரிவித்தேன் அவ்வளவுதான். இதைவிட முக்கிய விஷயங்களான பெண்களுக்கு எதிரான கொடுமைகள், தந்தை மகன் மரணம் ஆகியவற்றுக்கு குரல் கொடுப்போம் என்று கூறியுள்ளார்.
லட்சுமி ராமகிருஷ்ணன் மற்றும் வனிதா ஆகியோர்களின் இந்த ட்வீட்டுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது