புதிய அரசியலமைப்பு உருவாக்கல் நிபுணர் குழுவுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பு இன்று...

புதிய அரசியலமைப்பு உருவாக்கல் நிபுணர் குழுவுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பு இன்று...

புதிய அரசியலமைப்பு உருவாக்கல் பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவுக்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெறவுள்ளது.

இந்த சந்திப்பானது கொழும்பில் இன்று முற்பகல் 10.30 அளவில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் உள்ளிட்ட கூட்டமைப்பின் ஏனைய பங்காளிக் கட்சிகளின் தலைவர்களும் இந்த சந்திப்பில் கலந்து கொள்ளவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

புதிய அரசியலமைப்பு உருவாக்கலுக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகள் தொடர்பில் கலந்துரையாடும் நோக்கிலே இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்