நாட்டில் மேலும் 517 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதி

நாட்டில் மேலும் 517 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதி

நாட்டில் நேற்றைய தினம் 517 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

இதற்கமைய இலங்கையில் கொவிட் 19 தொற்றுறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 78,937 ஆக உயர்வடைந்துள்ளது.

பேலியகொடை கொவிட் கொத்தணியுடன் தொடர்புடைய 506 பேர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்ர சில்வா தெரிவித்துள்ளார்.

இதன்படி மினுவாங்கொடை, பேலியகொடை மற்றும் சிறைச்சாலை கொத்தணியில் தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 74,877 ஆக அதிகரித்துள்ளது.

அதேநேரம் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 11 பேருக்கும் நேற்றைய தினம் தொற்றுறுதியானதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், 5,938 கொவிட் 19 நோயாளர்கள் சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்றைய தினம் மாத்திரம் கொவிட்-19 தொற்றில் இருந்து மேலும் 743 பேர் குணமடைந்தனர்.

இதன்படி, நாட்டில் கொவிட் 19 தொற்றலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 72,566 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் இதுவரை 263,779 பேருக்கு ஒக்ஸ்பேர்ட் அஸ்ரசெனிகா கொவிஷீல்ட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப்பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

கடந்த 29 ஆம் திகதி முதல் இந்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

அந்த வகையில் நேற்றைய தினம் மாத்திரம் 30 ஆயிரத்து 307 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோய் விஞ்ஞானப்பிரிவு தெரிவித்துள்ளது.