இராணுவ மருத்துமனையில் தடுப்பூசியை பெற்றுக்கொண்ட தர்மலிங்கம் சித்தார்த்தன்

இராணுவ மருத்துமனையில் தடுப்பூசியை பெற்றுக்கொண்ட தர்மலிங்கம் சித்தார்த்தன்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூன்று பேருக்கு இன்றைய தினம் கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணியகத்தில் வைத்து அவர்களுக்கான தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளதாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், எஸ்.வினோநோகராதலிங்கம், சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோருக்கே இவ்வாறு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் இன்று இராணுவ மருத்துமனையில் தடுப்பூசியை ஏற்றிக் கொண்டார்.

இதேவேளை,கொவிட் 19 தடுப்பூசியை செலுத்தத் தவறிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அதனை செலுத்திக்கொள்வதற்கான மேலதிக கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற படைக்கள சேவிதர் இதனை தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, எதிர்வரும் 23, 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் ஒக்ஸ்ட்போர்ட் அஸ்ட்ரா செனீகா கொவிசீல்ட் தடுப்பூசிகளை செலுத்துவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.