
மிரிஸ்ஸ கடற்கரையில் பிரான்ஸ் பிரஜைகள் நால்வர் கைது
குடிவரவு குடியகல்வு சட்டத்தினை மீறி வெலிகம - மிரிஸ்ஸ கடற்கரைக்கு படகில் சென்ற 4 பிரான்ஸ் நாட்டு பிரஜைகள் கடலோர பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த 4 பேரும் 7 நாட்களுக்கு முன்னர் பிரான்ஸில் இருந்து பயணத்தை ஆரம்பித்திருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த படகின் எரிபொருள் தீர்ந்திருந்ததால் அதனை பெற்றுக்கொள்ளும் நோக்கில் மிரிஸ்ஸ கடற்றொழில் துறைமுகத்திற்கு வருகை தந்ததாக கைதானவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
60 முதல் 80 வயதிற்கு இடைப்பட்ட குறித்த பிரான்ஸ் பிரஜைகள் மேலதிக விசாரணைக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.