
தெஹியோவிட்டவில் 33 பேருக்கு கொரோனா
தெஹியோவிட்ட சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மேலும் 33 பேருக்கு நேற்றைய தினம் கொவிட்-19 தொற்றுறுதியானது.
இதன்படி அந்த பிரிவில் இதுவரை தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 570 ஆக அதிகரித்துள்ளது.
நேற்றைய தினம் அடையாளங் காணப்பட்ட நோயாளர்களில் 31 பேர் அவிசாவளை - சீதவாக்க ஏற்றுமதி வலயத்துக்குட்பட்ட தொழிற்சாலை ஒன்றுடன் தொடர்புடையவர்கள் என சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.
அத்துடன் தெஹியோவிட்ட - சப்புமல்கந்த தோட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கும் நேற்றைய தினம் கொவிட்-19 தொற்றுறுதியானதாக அந்த காரியாலயம் குறிப்பிட்டுள்ளது