முதல் தடவை தடுப்பூசி பெற்றுக்கொண்டோர் கட்டாயம் மீண்டும் தடுப்பூசி பெறவேண்டும்

முதல் தடவை தடுப்பூசி பெற்றுக்கொண்டோர் கட்டாயம் மீண்டும் தடுப்பூசி பெறவேண்டும்

ஒக்ஸ்போர்ட் எஸ்ட்ரா செனிகா முதலாவது தடுப்பூசியினை பெற்றுக்கொண்டவர்கள் இரண்டாவது ஊசியையும் கட்டாயம் பெற்றுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவ நிபுணர் ஹேமந்த ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார்.

முதலாவது தடுப்பூசியினை ஏற்றியதன் பின்னர் 10 முதல் 12 வாரங்களுக்கு இடையில் இரண்டாவது தடுப்பூசியினையும் செலுத்திக்கொள்ள வேண்டும்.

எனவே இரண்டாவது கெவிட்19 தடுப்பூசியினை கட்டாயம் பெற்றுக்கௌ்ள வேண்டும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்