இளம் தம்பதியினர் தீ வைத்து தற்கொலை!

இளம் தம்பதியினர் தீ வைத்து தற்கொலை!

வில்கமுவ - மீவாஓபே - நுககொல்ல பிரதேசத்தில் வீடொன்றுக்கு முன்னால் உள்ள வத்தக நிலையமொன்றினுள் கணவனும் மனைவியும் தமது உடலுக்கு தீ மூட்டி தற்கொலை செய்துள்ளனர்.

நேற்று (18) இரவு 10 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தில் 27 வயதான நபர் ஒருவரும் 23 வயதான அவரது மனைவியுமே இவ்வாறு தமது உடலுக்கு தீ மூட்டி உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக விசாரணையில் தொியவந்துள்ளது.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் பொலிஸாரின் பாதுகாப்புடன் சம்பவ இடத்திலேயே வைக்கப்பட்டுள்ள அதேவேளை, நீதிவான் விசாரணையின் பின்னர் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டவுள்ளது.

தற்கொலைக்கான காரணம் தெரியவராத நிலையில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


தற்கொலை தடுப்பு ஆலோசனை மையம்

Sri Lanka Sumithrayo 'Mel Medura'


011 2694665 or 1333