கிளிநொச்சியில் நூற்றுக்கணக்கான ஏக்கர் காணி சீனாவுக்கு!
கிளிநொச்சி - பளை பகுதியில் தென்னை பயிர்ச்செய்கைக்காக நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலத்தை சீன நிறுவனம் ஒன்றுக்கு வழங்கவுள்ளமை குறித்த தகவல் கிடைத்துள்ளதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
அதன் தலைவர் சுரேஸ் பிரேமசந்திரன் இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன், அபிவிருத்திக்காக இருக்கும் நிலங்களை பறிமுதல் செய்து சிங்கள தரப்பினருக்கு வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்,இது தவிர தற்போது வெளிநாடுகளுக்கு காணிகளை வழங்கும் திட்டங்களை முன்னெடுப்பதை தாங்கள் முழுமையாக எதிர்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்