
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கை
கிழக்கு மற்றும் வட மாகாணங்களில் சில இடங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை மாவட்டங்களின் சில இடங்களில் 50 மில்லி மீற்றர் அளவில் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதுதவிர, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இடைக்கிடையில் மழை பெய்யக்கூடும்.
அதேநேரம் மத்திய, சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான காலநிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது